close
Choose your channels

எனது மகனை அறிமுகம் செய்கிறேன்: நடிகை வரலட்சுமியின் வீடியோ வைரல்!

Monday, May 31, 2021 • தமிழ் Comments

விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் விஜய்யின் ’சர்க்கார்’ தனுஷின் ’மாரி 2’ விஷாலின் ண்டக்கோழி 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வரலட்சுமி. இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பெண்ணியவாதியாகவும், சமூக சேவை செய்பவராகவும், குறிப்பாக விலங்குகள் நலனில் அக்கறை உள்ளவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது மகனை அறிமுகப்படுத்துவதாக நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வரலட்சுமி வளர்த்துவரும் நாய்களில் ஒன்று புதிதாக குட்டி போட்டு உள்ள நிலையில் அந்த குட்டி நாயை எடுத்து அனைவரிடமும் அறிமுகப்படுத்தும் காட்சிகள் கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் வரலட்சுமி பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக ‘என்னுடைய மகனை அறிமுகப்படுத்துகிறேன்’ என்று வரலட்சுமி பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த வீடியோவை ஒரு சில மணி நேரங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமி தற்போது ’காட்டேரி’ ’பாம்பன்’ ’கலர்ஸ்’ ’யானை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz