வரலட்சுமியின் செம ஆட்டத்திற்கு இந்த நம்பர் தான் காரணமா? வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

நடிகை வரலட்சுமி செம டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி என்பதும் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி அதன் பின்னர் ’தாரை தப்பட்டை’ ’சண்டக்கோழி 2’ ’சர்கார்’ ’மாரி 2’ ’நீயா 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் 9 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் இலங்கை சென்ற வரலட்சுமி அங்கிருந்து கொண்டே பதிவு செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகின. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வரலட்சுமி செம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு காரணமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் வந்ததை அடுத்து சந்தோஷத்தில் டான்ஸ் ஆடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’என் மீது பொழிந்த அன்பிற்கு மிகவும் நன்றி! இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் என்பதை கேட்டவுடன் நான் சிரித்து மகிழ்வதை பார்க்கவே இந்த டான்ஸ் ஆடுகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் உங்கள் அனைவருடனும் நான் மேலும் நெருக்கமாக இருப்பதாகவும் உணர்கிறேன், உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன், என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த டான்ஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.