சேவ் சக்தி'யின் நோக்கம் என்ன? நடிகை வரலட்சுமி விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

பிரபல நடிகை வரலட்சுமி பெண் திரையுலக கலைஞர்களுக்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து இன்று அவர் மேலும் கூறியதாவது:
சமீபத்தில் நான் சமூக வலைத்தளம் ஒன்றில் போஸ்ட் ஒன்றை பதிவு செய்தேன். அந்த பதிவிற்கு நான் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு இருந்தது. அப்பொழுதுதான் பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்களை பெற்றுள்ளனர் என்று தெரியவந்தது. இதன் பின்னர் பெண் கலைஞர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
பின்னர் இதுகுறித்து நான் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தேன். அவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு அமைப்பை ஆரம்பித்துள்ளோம். அந்த அமைப்பின் பெயர்தான் 'சேவ் சக்தி' (Save Sakthi). இந்த அமைப்பின் மூலம் மாநில அரசிடம் இரண்டு கோரிக்கைகள் வைக்க உள்ளோம். முதலாவதாக பெண்களுக்கு நேரும் குற்றங்களை விசாரிக்க என்று தனி நீதிமன்றம் தேவை. இந்த நீதிமன்றத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேரும் துன்பத்திற்கு எதிராக துணிந்து புகார் கொடுக்க வர முடியும். இரண்டாவது இந்த நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் நீதி கிடைக்க வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். அதேபோல் குற்றம் செய்யும் குற்றவாளிகளும் தண்டனை விரைவில் கிடைக்கும் என்பதை யோசித்து குற்றம் செய்ய தயங்குவார்கள்
மேலும் திரையுலகில் ஃபெப்சி என்ற அமைப்பும் அதற்கு கீழே ஒரு 24 அமைப்புகளும் உள்ளது. ஆனால் பெண்களுக்கு என ஒரு தனி அமைப்பு இல்லை. அந்த குறையை இந்த சேவ் சக்தி போக்கும். நடிகை மட்டுமின்றி துணை நடிகைகள், டான்சர்கள் என திரையுலகில் இருக்கும் அனனத்து பெண் கலைஞர்களுக்காகவும் இந்த சேவ் சக்தி உறுதுணையாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

More News

ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது பெரும் ஆதரவை கொடுத்த ராகவா லாரன்ஸ் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தார்

இந்த கம்பீரம் அந்த 122 பேர்களுக்கு இருக்குதா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சசிகலா ஆதரவாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 122 எம்.எல்.ஏக்கள் பொதுமக்களின் அதிருப்தியை பெற்று சொந்த தொகுதிக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த 122 எம்.எல்.ஏக்கள் குறித்து நடிகரும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டால

அமிதாப்-ஜெயாவுடன் ஒப்பிடப்பட்ட அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது மனைவி.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பகுதியில் இனவெறியன் ஒருவனால் துப்பாக்கி சூட்டில் பலியான இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மரணம் அவரது குடும்பத்தினர்களை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துள்ளார்.

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர். உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஒருபக்கம் நேற்று முதல் தமிழகத்தில் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்பட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.