close
Choose your channels

ராதிகாவின் 'சித்தி' கேரக்டரில் நடிக்கும் சித்தி மகள்?

Tuesday, February 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனை அடுத்து ராதிகாவின் சித்தி கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

ராதிகா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன், மீனா, தேவயானி உள்பட ஒருசில நடிகைகள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ராதிகாவின் சித்தி கேரக்டரில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வரலட்சுமிக்கு ராதிகா உண்மையாகவே சித்தியாக இருக்கும் நிலையில் ’சித்தி’ கேரக்டரில் வரலட்சுமி நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.