மணக்கோலத்தில் புகைப்படம் பதிவிட்ட நடிகை வேதிகா? டிவிஸ்ட் பதிலோடு வைரல்!

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் நடிகை வேதிகா. அதற்கு முன்பு மதராஸி படத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் “பரதேசி“ படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார். ஆனால் அதற்கு பின்பு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வேதிகா தற்போது ப்ரைடல் லுக்கில் வெள்ளை கவுன் அணிந்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ஆனால் கூடவே கேப்ஷனில் “நல்ல வேளை நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை” எனப் பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் இந்தப் பதிவு தன்னுடைய திருமணத்தை பற்றியது இல்லை என்பதையும் அவர் தெளிவுப் படுத்தி உள்ளார்.

இந்நிலையில் மணக்கோலத்தில் இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது தமிழில் நடிகர் பிரபுதேவாவுடன் “வினோதன்“ திரைப்படத்திலும் அதுதவிர “ஜங்கிள்” போன்ற ஒருசில திரைப்படங்களில் நடிகை வேதிகா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மக்கள் ஓட்டு யாருக்கு? அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு!

அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பில்

அதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

மாலத்தீவுக்குப் பறந்த முன்னணி நடிகை… இத்தேர்வுக்கு அவர் கூறிய காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பறப்பதை போல ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 கோடி ஜாக்பாட்… அதுவும் ஒரு வாந்தியால் வந்த அதிர்ஷ்டம்?

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா என்று பலரும் கேட்டு இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணிற்கு அதிர்ஷ்டம் கடலில் இருந்து கரை ஒதுங்கி இருக்கிறது.

'இறுதிச்சுற்று' படத்தில் நடித்தவரா இவர்? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

கடந்த 2016ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதிச்சுற்று'திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே