close
Choose your channels

கணவருடன் ஊஞ்சலாடும் நடிகை வித்யூலேகா: வைரல் புகைப்படங்கள்

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவரான வித்யூலேகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் கணவருடன் இணைந்து ஊஞ்சலாடும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா. அதன்பின் இவர் ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’ஜில்லா’ ’வீரம்’ ’காக்கிசட்டை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வித்யூலேகாவுக்கும் சஞ்சய் என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து செப்டம்பர் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்து திருமண புகைப்படங்களை வித்யூலேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நடைபெறும் ஊஞ்சல் வைபவம் சமீபத்தில் நடைபெற்றதாக அறிவித்துள்ள வித்யூலேகா. அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சில நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வித்யூலேகா தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz