மூன்றே வருடங்களில் 'வித்யூலேகா ராமன்' செய்த சாதனை

  • IndiaGlitz, [Friday,August 07 2015]

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளிவந்த "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன், அதன் பின்னர் 'தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும் நடித்துவிட்டார்.


சமீபத்தில் வெளிவந்த சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படத்தில் கிளைமாக்ஸில் சந்தானத்தின் மனைவியாக நடித்து படத்தின் டுவிஸ்ட்டிற்கு உதவியாக இருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தெலுங்கில் உருவாகவிருக்கும் அல்லுஅர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் இது இவருக்கு 25வது படம் என்பதுதான்.

2012ஆம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை தொடக்கிய வித்யூலேகா ராமன் மூன்றே வருடத்தில் 25 படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகைக்கு இருந்த பற்றக்குறையை நிவர்த்தி செய்துள்ளார். கோலிவுட்டில் புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் பலர் தோன்றி வரும் நிலையில் நகைச்சுவை நடிகைகள் இவரை போல அத்திபூத்தாற்போலத்தான் ஜொலிக்கின்றனர். 25வது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் இவர் இன்னும் அதிகளவிலான படங்களில் நடிக்க வாழ்த்துக்கள்.

More News

புறம்போக்கு நாயகியின் புதிய ஆபரேஷன் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்...

பாலா-சற்குணம்-அதர்வா இணைந்த 'சண்டிவீரன்'. ஒரு முன்னோட்டம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற 'வாகை சூடவா' படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சண்டிவீரன்....

கார்த்தி-நாகார்ஜூனா பட டைட்டில் குறித்த முக்கிய அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜூனா முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு...

தயாரிப்பாளராக மாறினார் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அவரது ராஜ்கமல்...

செல்வராகவனின் 'கான்' படத்தில் சிம்புவின் கேரக்டர்

சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் இளையதளபதி விஜய்யின் உதவியால் அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ள நிலையில்....