close
Choose your channels

புதிய காதலருடன் நெருக்கம்: ரஜினி, விஜய் பட நடிகையின் வைரல் புகைப்படம்

Monday, June 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி, விஜய், தனுஷ் படங்களில் நடித்த நடிகை, தனது புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’, விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்க மகன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். பிரிட்டனை சேர்ந்த எமிஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்பி எமிஜாக்சன் - ஜார்ஜ் திருமணம் நடந்த நிலையில் திடீரென தனது கணவர் ஜார்ஜை, எமிஜாக்சன் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜின் அனைத்து புகைப்படங்களையும் அவர் நீக்கியதை அடுத்தே இந்த செய்தி பரவியது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமிஜாக்சன் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விரைவில் எமிஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும், இங்கிலாந்து நாட்டின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.