'இது நம்ம ஆளு' படத்தின் மூன்றாவது நாயகி யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,March 11 2016]

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா உள்பட மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்படும் நிலை உள்ளதாக கடந்த ஒருசில மாதமாக தகவல்கள் வெளிவந்து கொண்டே உள்ளது. ஆனால் இந்த ஒரு பாடலில் சிம்புவுடன் நடிக்கப்போகும் நடிகை யார்? என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தது.


முதலில் சிம்புவுடன் இந்த பாடலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் பின்னர் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் ஆண்ட்ரியாவும் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக பிரபல தெலுங்கு நடிகை ஆதா ஷர்மா அந்த பாடலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது.

தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ஆதா ஷர்மா இந்த பாடலுக்கு நடனம் ஆடுவது மட்டுமின்றி ஒருசில முக்கிய காட்சிகளிலும் நடிக்கவுள்ளதாகவும் இவர் இந்த படத்தின் மூன்றாவது நாயகி என்றும் கூறப்படுகிறது. யார் நடித்தாலும் சரி, 'இது நம்ம ஆளு' திரைப்படம் சீக்கிரம் வெளிவர வேண்டும் என்பதுதான் சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை சிம்பு விரைவில் நிறைவேற்றுவார் என நம்புவோம்.

More News

'தனி ஒருவனுடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்

'ரஜினிமுருகன்' வெற்றிப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்...

30-ஐ 14-ல் முடித்த சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய...

'தெறி' இயக்குனரின் அடுத்த பட டைட்டில்

'ராஜா ராணி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இரண்டாவது படத்திலேயே இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர்

விஜய் ரசிகர்களின் ரிங்-டோனாக மாறுமா 'அதரவைப்போம்' பாடல்கள்?

இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கரும், விஜய் இளைஞர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியுமான ஜான் விக்னா என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'அதரவைப்போம்'...

'பாகுபலி'க்கு இணையாகுமா 'காஷ்மோரா'?

இனிமேல் தமிழ் சினிமாவில் போர்க்காட்சிகள் இடம்பெறுகிறது என்ற செய்தி வெளிவந்தால் உடனே அனைவருக்கும் 'பாகுபலி' போர்க்காட்சிகள்...