close
Choose your channels

'வந்து கொண்டிருக்கின்றேன் ராவணா'.. பிரபாஸின் 'ஆதிபுருஷ்' டிரைலர்..!

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகிய இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதும் பெரும் பொருட்செலவில் அளவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக ‘ஆதிபுருஷ்’ டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

‘வந்து கொண்டிருக்கிறேன் ராவணா, வந்து கொண்டு இருக்கிறேன். தர்மத்தின் இரு பாதங்களோடு அதர்மத்தின் 10 தலைகளை கொய்ய வந்து கொண்டிருக்கிறேன், என் மனைவி ஜானகியை மீட்டெடுக்க வந்து கொண்டிருக்கிறேன், அதர்மத்தை சர்வநாசம் செய்ய வந்து கொண்டிருக்கின்றேன்’ என்ற பிரபாஸ் வசனங்களோடு இந்த டிரைலர் ஆரம்பமாகிறது.

முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ரசிகர்கள் மனதை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நடிகர்கள் நடித்த காட்சிகளை விட கிராபிக்ஸ் காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

பிரபாஸ், சையது அலிகான், கீர்த்தி சோனன், சன்னி சிங் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார். சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும்? எந்த அளவுக்கு வசூலை குவிக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.