close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் நண்பர்களின் வாரிசுகள்: பரபரப்பு தகவல்

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், தீனா, ரக்சன், நடிகைகள் அம்ரிதா ஐயர், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டாலும் போட்டியாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமலஹாசனின் நெருங்கிய நண்பர்களான இரண்டு பிரபல நடிகர்களின் வாரிசுகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர். இவர் விஜய் சேதுபதி நடித்த ’96’ படத்தில் இளம் விஜய்சேதுபதியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதே போல் இன்னொருவர் பிரபல நடிகர் நாசரின் மகன் அபிஹாசன். இவர் கமல் தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளியான ’கடாரம் கொண்டான்’ என்ற படத்தில் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்கள் இருவரையுமே கமலஹாசன் பரிந்துரை செய்ததாகவும் எனவே இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.