close
Choose your channels

துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' குறித்த முக்கிய அறிவிப்பு

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் இந்த படம் மீண்டும் இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் ஆதித்யவர்மா’ என்ற பெயரில் தயாரானது

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் பாடல்கள் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராதன் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களின் மனதை கவருமா? என பொறுத்திருந்து பார்ப்போம்

ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில், ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.