கேன்ஸ் விழாவில் ஒரு மஞ்சள் மேகம்… மணிரத்னம் பட நடிகையை கொண்டாடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,May 26 2023]

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நிலையில் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திலும் பின்னர் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை அதிதிராவ் ஹைதாரி. நடிப்பைத் தவிர பாடகி மற்றும் நடனக் கலைஞராகவும் இருந்துவரும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது நடிப்பில் வெளியான ‘ஜுப்லி மற்றும் தாஜ் டிவைடட் பிளட்‘ எனும் வெப் சீரிஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இரண்டாவது பாகத்திலும் நடித்துவரும் நிலையில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஹீரமண்டி‘ வெப் சீரிஸிலும் இவர் இணைந்து நடித்துவருகிறார்.

இப்படி பாலிவுட், தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பிரபலமாக இருந்துவரும் நடிகை அதிதிராவ் ஹைதாரி இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் விழாவில் இவர் வெள்ளை நிறத்திலான சேலை மற்றும் பிங்க் நிறத்திலான கவுனை அணிந்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு மஞ்சள் மேகம் போன்று காட்சியளிக்கும் சிறப்பான கவுன் தோற்றத்தில் இவர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை அதிதிராவ் ஹைதாரியின் மஞ்சள் நிற கவுன் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

60 வயதில் திருமணம் செய்த ஆஷிஷ் வித்யார்த்தி.. முதல் மனைவியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' தளபதி விஜய் நடித்த 'கில்லி' உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தற்போது 60 வயதில்

சன் பிக்சர்ஸ் - அட்லி பட ஹீரோ இவரா? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர்

கவுண்டமணி படத்தில் நடிக்கும் 11 தயாரிப்பாளர்கள்.. சிறப்பு தோற்றத்தில் மாஸ் நடிகர்..!

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் கவுண்டமணி, நேற்று தனது 84 வது பிறந்த நாளை கொண்டாடிய போது அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

என் சகோதரர் தல தோனி கையில் பாதுகாப்பாக இருக்கிறார்.. பதிரானா சகோதரி நெகிழ்ச்சி..!

என் சகோதரர் தல தோனியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார் என்று மதிஷா பதிரானா சகோதரி நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதுபதியின் அடுத்த படம் ஓடிடியில் நேரடி ரிலீஸ்.. தேதியை அறிவித்த ஜியோ சினிமா..!

கடந்த சில மாதங்களாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கட்டத்தில் நேரடியாக எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை