ரொமான்ஸ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? மீண்டும் கிராமத்து கேரக்டரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிதிஷங்கரின் முதல் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்பு நடிக்க உள்ள ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரொமான்ஸ் படங்களை இயக்குவதில் வல்லவரான கௌதம் மேனனின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ’கப்பேலா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திலும் அதிதிஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகி கேரக்டர் கிராமத்து பெண் என்ற நிலையில் மீண்டும் அதிதிஷங்கர் கிராமத்தில் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

பேரறிவாளன் முதலில் இதை செய்திருக்க வேண்டும்: அஜித், விஜய் இயக்குனரின் டுவிட்

பேரறிவாளன் விடுதலை ஆனவுடன் முதலில் இதை செய்திருக்க வேண்டும் என அஜித் விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .

மகள் அட்ஜெஸ்ட் பண்ணலைன்னாலும் பரவாயில்லை, அம்மா அட்ஜெஸ்ட் பண்ணலாம்: பிரபல நடிகையின் ஷாக்கிங் பேட்டி

மகள் அட்ஜஸ்ட் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என திரையுலக பிரமுகர் ஒருவர் கேட்டதாக பிரபல நடிகை ஒருவர் ஷாக்கிங் பேட்டி அளித்து

வாடிவாசலுக்கு முன் இன்னொரு படம்: இயக்குனரை உறுதி செய்த சூர்யா!

சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'டான்': டபுள் சென்சுரி அடித்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் திரையுலகையே ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'டான்' திரைப்படமும்

சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் இன்னொரு நடிகர்!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.