அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி: ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,August 15 2022]

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ படத்தை பார்த்து அதிதி தான் எனது காதலி என மீடியா முன் ஆவேசமாக பேசிய நடிகர் ஒருவர் தற்போது திடீரென பல்டி அடித்து அதிதி எனது தங்கச்சி மாதிரி என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான போது பல திரையுலக பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலக நடிகர்களில் ஒருவரான கூல் சுரேஷ், ‘விருமன்’ படத்தை பார்த்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அதிதியை தியேட்டரில் பார்த்து சில்லறைய சிதற விட்டேன் என்றும் அதிதி தான் என்னுடைய காதலி என்றும் பேசினார். அதுமட்டுமின்றி அதிதியை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் ஷங்கர் தனது படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னையும் அதிதி உடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென அவர் தற்போது அதிதி தனது தங்கச்சி மாதிரி என்றும் தனது பள்ளி தோழி தேன்மொழி நினைப்பில் நான் அவ்வாறு பேசி விட்டேன் என்றும் நான் அப்படி பேசியது தவறுதான் என்றும், ஷங்கர் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி அதிதி எனக்கு தங்கச்சி என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News

பார்சிலோனாவில் பட்டொளி வீசி பறக்கும் இந்திய தேசிய கொடி: நயன் - விக்கியின் செம வீடியோ!

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள்

நயன், விக்கி பார்சிலோனா பயணத்திற்கு அஜித் காரணமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு  சென்றார்கள் என்பதும் அங்கிருந்து

தனுஷின் பாடலுக்கு செம நடனமாடும் சூப்பர் சிங்கர் மானசி: உடன் ஆடுபவர் யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் மானசி,

ரஜினி பாடலுக்கு செமையாக தாளம் போடும் ப்ரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடலுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் தாளம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'யோஹான்' டிராப் ஆகி 12 வருடங்கள்: மீண்டும் இணையும் விஜய்-கெளதம் மேனன்?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்த 'யோஹான் அத்தியாயம் ஒன்று' என்ற திரைப்படம் டிராப் ஆகி 12 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது மீண்டும் விஜய், கௌதம்