close
Choose your channels

விஷ்ணுவர்தனின் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர்.. ஹீரோ யார் தெரியுமா?

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’பில்லா, ‘ஆரம்பம்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் அடுத்த திரைப்படத்தின் நாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது இயக்கி வரும் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடித்துவரும் நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.