close
Choose your channels

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக!

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்க சற்றுமுன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் தர முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெறவுள்ள 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

அதிமுக கூட்டணியில் பாமக முதலில் இடம்பிடித்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.