தவறு செய்த முன்னாள் முதல்வரின் கூட இருந்ததால் சின்னம்மா தண்டிக்கப்பட்டார். அதிமுக பிரமுகர்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை சிறையில் இருக்கும் சசிகலா ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சிறையில் இருந்து சசிகலா இடும் கட்டளையை முதல்வர் நிறைவேற்றி வருவதாகவும் இது ஒரு பினாமி அரசு என்றும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர் கெளரிசங்கர், 'இந்த அரசை பினாமி அரசு என்று சிலர் கூறுகின்றனர். இது பினாமி அரசாங்கம் தான். இது சசிகலா கண்ட்ரோலில் நடக்கும் அரசாங்கம்தான். இது தினகரன் அவர்களின் கண்ட்ரோலில், மேற்பார்வையில் நடக்கும் அரசுதான். நான் பகிரங்கமாக கூறுகிறேன். சசிகலாவை ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வைத்தாலும், அவர்கள் இடும் கட்டளையை செயல்படுத்தும் அரசாகத்தான் இது இருக்கும். இதில் மாறுபட்ட கருத்து எங்கள் யாருக்கும் இல்லை

சசிகலா மீது போடப்பட்ட வழக்கே பொய்வழக்கு. ஏற்கனவே இருந்த முதல்வருக்காக போடப்பட்ட வழக்கு இது. சசிகலா அவர்கள் கூட இருந்ததால் இவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த வழக்கும் தவறும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் தவறு என்று கூறியுள்ளார்.

பொறுக்கி என்று சுப்பிரமணியன் சுவாமியை நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை, மக்களே பார்த்துக் கொள்வார்கள் என்று கமல் கூறியது போல, கெளரிசங்கர் இந்த கருத்துக்கு நாம் எந்த விமர்சனமும் முன்வைக்கப்போவதில்லை. மக்களே நேரம் வரும்போது பார்த்து கொள்வார்கள்.

More News

புதுக்கட்சி தொடங்குகிறார் தீபா. தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். என்ன ஆச்சு தமிழ்நாட்டுக்கு?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி-இடம் அறிவிப்பு

தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 5ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது...

என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை. கருணாஸ்

நகைச்சுவை நடிகர் கருணாஸ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தபோது கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தார்...

பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன். விஷால்

நடிகர் சங்க செயலாளரும், பிரபல நடிகருமான விஷால் தற்போது 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். சிதம்பரம் மாவட்டம் பிச்சாவரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.