சசிகலா குடும்பம் வெளியேறிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன் - தம்பிகள். கே.பி முனுசாமி

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக தலைவர்கள் அனைவருமே சசிகலாவின் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தினகரனின் கட்டுப்பாட்டுக்கு கட்சி மாறியது. இப்படி சசிகலாவின் குடும்பத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்த அதிமுகவினர் இப்போதுதான் தைரியமாக சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றிவிட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்களில் ஒருவராகிய கேபி முனுசாமி, 'சசிகலா குடும்பத்தை வெளியேற்றி விட்டால் இரு அணியினரும் அண்ணன் -தம்பிகள் என்று கூறியுள்ளார்.
இன்று சென்னை க்ரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி மேலும் கூறியபோது, 'அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர் அகற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அண்ணன் தம்பிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு மீண்டும் சுமூகமாகும்போது சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளப்படும். எங்கள் கோரிக்கையை ஏற்று சசிகலா பேனர்களை அகற்றியது பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கை. தொடர்ந்து எங்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது.
சசிகலா குடும்பத்தை அகற்றினால் நாங்கள் எல்லாம் அண்ணன் -தம்பிகள். கருத்துவேறுபாடுகளை முதலில் அகற்றி விட வேண்டும். சுமூகமான சூழல் அமையும் போது பேச்சுவார்த்தை நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் உள்ளவர்கள் எதிரணியிலும் உள்ளனர். சின்னத்தைப்பெற தேர்தல் கமிஷனுக்கே பணம் கொடுத்து கட்சியை வளைக்கப்ப்பார்த்திருக்கிறார் டிடிவி.தினகரன். அவரைக் கைது செய்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது' என்று கூறினார்.

More News

'தளபதி 61' படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த ஜோதிகா

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் மூன்று நாயகிகள் என்று முடிவு செய்த பின்னர் அவர்கள் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா என்று தான் முதலில் உறுதி செய்யப்பட்டது.

பாகுபலி 2: ஒரு முன்னோட்டம். இந்தியாவின் பிரமாண்டமான படத்தை உற்சாகமாக வரவேற்போம்

உலக அரங்கில் தென்னிந்திய சினிமாவின் தரத்தைப் பறைசாற்றி இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்த படம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’. இந்தப் பிம்மாண்ட வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' இந்த வாரம் வெளியாகிறது.. ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட், அர்னால்ட், சில்வர்ஸ்டர் ஆகியோர்கள் படங்கள் ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூல் செய்&#

டிடிவி தினகரனை அடுத்து டெல்லி போலீஸ் வளையத்தில் இரண்டு அதிமுக விஐபிகள்?

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரா மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்,. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என்றும் அதன்பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்கவும் டெல்லி போலீஸார் திட்டமி

மணிரத்னம் பட தோல்விக்கு வைரமுத்து பாடல் காரணமா?

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து இந்த மூன்று ஜாம்பாவன்கள் இணைந்து உருவாக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஒருசில படங்கள் தோல்வி அடைந்தாலும், அந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகியிருக்கும். அந்த வகையில் இந்த மூவரும் இணைந்து தோல்வி அடைந்த ஒரு படம் 'திருடா திருடா', ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் சிறந்த பாடல்களாக 

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் தொடங்குவது எப்போது? புதிய தகவல்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது...