காமஹாசனும் கதாகாலட்சேபமும்: கமல்ஹாசனை விமர்சித்த அதிமுக நாளிதழ்


Send us your feedback to audioarticles@vaarta.com


பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து நேற்று கமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் ஆதரவு குவிந்தது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த வீடியோவுக்கு அதிமுக நாளிதழ் ஒன்று கடும் விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர்கள் சட்டத்தில் அடைக்கப்பட்டு, சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ள நிலையில் அதிமுக மீது வன்மம் கொண்டு உள்நோக்கம் கற்பிக்க கமல்ஹாசன் வெறிபிடித்து அலைவதாக குறிப்பிட்டுள்ளது.
திமுக போன்ற கட்சிகளுடன் கமல்ஹாசனும் இணைந்து செயல்படுவது தேர்தல் கால நரித்தனங்களே என்றும், அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜெயலலிதா மரணச் செய்தியை அடிமனதில் கொண்டாடிய கமல்ஹாசன் பொள்ளாச்சி விவகாரத்தில் சத்தியம் தவறாமல் நடக்கும் அதிமுக அரசு மீது உள்நோக்கம் கற்பிப்பதில் புதுமை ஒன்றும் இல்லை என்றும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
மேலும் கமல்ஹாசனை விட்டு நடிகை கவுதமி பிரிந்து போனதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்து விட்டு, பாலியல் குற்றங்கள் குறித்து கமல்ஹாசன் கதாகாலட்சேபம் நடத்தலாம் என்றும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments