close
Choose your channels

சர்கார் படம் ஓடும் தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம். மதுரையில் பரபரப்பு

Thursday, November 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த படம் என்றாலே ரிலீசுக்கு முன்னரும், ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமான ஒன்றே. அதேபோல் 'சர்கார்' படத்திற்கு ரிலீசுக்கு முன்னதாக 'கதைத்திருட்டு' பிரச்சனையும் ரிலீசுக்குக் பின்னர் அரசியல்வாதிகளால் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற இலவசங்கள் குறித்த காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனங்களை நேற்றுமுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் 'சர்கார்' படக்குழுவினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்குகள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மதுரையில் சர்கார் திரையிடப்படும் தியேட்டர் முன் அதிமுக பிரமுகர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதாகவும், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை தொடர்ந்து திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளதாகவும், இதனால் திரையரங்குகள் முன் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.