மதுரையை அடுத்து கோவையிலும் 'சர்கார்; படத்தை எதிர்த்து போராட்டம்

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் ஏற்கனவே ஓப்பனிங் வசூலில் சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்தின் வசூல், 'மெர்சல்' வசூல் சாதனையை முறியடிக்க தமிழக அரசியல்வாதிகள் உதவி செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த படத்தின் ஒருசில காட்சிகளை நீக்கவேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் கூறியதை அடுத்து அதிமுகவினர் இந்த படம் திரையிடும் தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் மதுரை சினிப்ப்ரியா காம்ப்ளக்ஸில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் இன்றைய மதிய காட்சிகள் ரத்தாகிவிட்டது.

இந்த நிலையில் மதுரையை அடுத்து கோவையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர். கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள சாந்தி தியேட்டரில் சர்கார்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில் அந்த தியேட்டர் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள் சர்கார் பேனர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

அதிமுகவினர் போராட்டம் எதிரொலி: சர்கார் காட்சிகள் ரத்து

மதுரையில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்பிரியா காம்ப்ளக்ஸ் முன் இன்று மதியம் அதிமுக பிரமுகர் ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நடிகர் விஜய்யை அதிமுக அரசால் எதிர்க்க முடியாது: தங்க தமிழ்செல்வன்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய வசூலை பெற்றாலும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளதால் இனிவரும் நாட்களில் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

'சர்கார்' படம் குறித்து திருமாவளவன் கூறிய குழப்பமான கருத்து

தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இல்லாத எதிர்ப்பு விஜய் படம் வெளியாகும் போது மட்டும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் புகார்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக ஒருசில கட்சிகளின் அரசியல்வாதிகளின் கண்டனங்களை பெற்று வரும் நிலையில்

சர்கார் படம் ஓடும் தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம். மதுரையில் பரபரப்பு

தளபதி விஜய் நடித்த படம் என்றாலே ரிலீசுக்கு முன்னரும், ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமான ஒன்றே.