அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கம். புதிய அவைத்தலைவர் யார்?

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ் அவர்களே முதல்வராக நீடிக்கவேண்டும் என்றும் அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் சசிகலா பொதுச்செயலாளரானதை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுசூதனனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை அதிமுக அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கியுள்ளார். அதுமட்டுமின்றி மதுசூதனனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சசிகலா நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மதுசூதனன் - சசிகலா மாறி மாறி எடுத்து வரும் நடவடிக்கைகளால் இருவருக்கும் இடையே ஆடுபுலி ஆட்டம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

வித்தியாசமான போஸ் கொடுத்த பிரபல நடிகை கைது.

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'எக் யோதா' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி அல்பாட்

ஓபிஎஸ் மூலம் எனக்கு மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தனக்கு மிரட்டல் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சசிகலா பதவியேற்பு இல்லையா? சென்னை பல்கலையில் பாதுகாப்பு வாபஸ்

தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபம் தயார் செய்யப்பட்டு அதற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது....

டிஜிபியை அடுத்து தலைமைச்செயலாளர், உளப்பிரிவு ஆணையர் கவர்னருடன் சந்திப்பு. என்ன நடக்க போகிறது?

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்று முன்னர் டிஜிபி ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு, எம்.எல்.ஏக்களின் இருப்பிடம் குறித்து ஆலோசனை செய்தார்...

ஆளுனர் மாளிகையில் டிஜிபி அவசர ஆலோசனை

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், தற்போதைய அரசியல் சிக்கலை தீர்க்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது....