எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி எதிரொலி. கூவத்தூர் செல்கிறார் சசிகலா

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

கூவத்தூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருசில எம்.எல்.ஏக்கள் ஊடகங்கள் முன் தோன்றி தாங்கள் விருப்பப்படி இருப்பதாக கூறினாலும் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும், உடனே ரிசார்ட்டில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கூவத்தூரில் உள்ள ஒருசிலர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாளர்களாக மாறும் மனப்பான்மையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாளிக்கும் வகையில் சசிகலாவே நேரடியாக தற்போது கூவத்தூர் சென்று கொண்டிருக்கின்றார். இன்னும் சில நிமிடங்களில் அவர் கூவத்தூரை அடைவார் என்று கூறப்படுகிறது.

சசிகலா மிகவும் நம்பிக்கை வைத்திருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களே அணி மாறியதால் அவரை அடுத்து மேலும் சிலர் அணி மாறவுள்ளதாக வந்த தகவலை அடுத்தே அவர் கூவத்தூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

More News

மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம். பார்த்திபனின் அரசியல் கவிதை

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி கமல்ஹாசன், விசு, கங்கை அமரன் போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் செய்ய வேண்டிதை செய்வோம். சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில்...

ஓபிஎஸ்- மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு. நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் முதல் கேபினட் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்...