ரஜினி தப்பித்துவிட்டார், தூண்டிலில் விஜய் சிக்கிவிட்டார்: அதிமுக செய்தி தொடர்பாளர்..!

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொல்லி பாஜக வலியுறுத்தியது என்றும் ஆனால் ரஜினி தப்பித்துவிட்டார் என்றும் பாஜகவின் தூண்டிலில் விஜய் சிக்கிவிட்டார் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நேற்று அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு தனது கட்சியின் பெயரையும் தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்தார். இதனை அடுத்து அவரது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவரது கட்சி தேர்தல் ஆணையத்தில் விரைவில் பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் சமீபத்தில் அனைத்து பேட்டியில் விஜய்யின் அரசியல் குறித்து கூறியுள்ளார்

’தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்க சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். அடுத்த தூண்டில் விஜய் தான். தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

 

More News

பாலிவுட் பிரபலத்திற்கு ஜோடியாகும் த்ரிஷா.. அஜித் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம்

'கோட்' படத்தின் டெக்னாலஜியை பயன்படுத்தும் லோகேஷ்.. வேற லெவலில் 'தலைவர் 171'

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'பிகில்' பாண்டியம்மாளின் திருமண நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படங்கள், வீடியோ..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படத்தின் இசை வெளியீடு..!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'லவ்வர்'. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. சாகவில்லை.. வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்த நிலையில் இன்று அவர் திடீரென தான் உயிரோடு இருக்கிறேன்