விஜய்க்கு அட்வான்ஸ் வாழ்த்து கூறிய தனுஷ்

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்றில் இருந்தே அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் இன்று நடிகர் தனுஷ், விஜய்க்கு தனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடின உழைப்பாளி, அர்ப்பணிப்பு உணர்வு, மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவரும், நான் மிகவும் மதிக்கும் ஒருவருமான விஜய் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மாலை 6 மணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளது. எனவே இன்றும் நாளையும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தனுஷின் 'விஐபி 2' பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'விஐபி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது...

ரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி

ஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷாசேகல் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்...

ரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா? இல்லை பள்ளிக்கூடமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட லட்டர்பேட் கட்சிகள் பதறுகின்றன.

பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கெத்து : ஆம்புலன்ஸ்க்காக ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய காவலர்

முதலமைச்சர் அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதைத்தான் நாம் இதுவரை பலமுறை பார்த்துள்ளோம்.