ஏ வதன் மேரே வதன்திரைப்படத்தின் உண்மை கதாநாயகி இவர்கள் தானா ?

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

 

கண்ணன் ஐயர் இயக்கத்தில் மற்றும் கரண் ஜோஹரால் தயாரிக்கப்பட்ட ஏ வதன் மேரே வதன் என்னும் ஹிந்தி மொழி வரலாற்று திரைப்படம் சமீபத்தில் வெளியானது.கதாநாயகியாக சாரா அலி கான் நடித்துள்ளார்.இத்திரைப்படம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட உஷா மேத்தா என்னும் தைரியமான இளம் பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன.

யார் இந்த உஷா மேத்தா? 1935இல் 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் 25 மாணவர்களில் ஒருவராக மேத்தா இடம் பெற்றார்.ஆங்கிலம்‍, ஹிந்தி, குஜராத்தி, மராத்தி போன்ற பல மொழிகளில் புலமைப் பெற்றவர்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒருவராக மேத்தா இருந்தார்.1940களில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் ஒத்துழையாமைச் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்த மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.மேலும் காங்கிரஸில் உறுப்பினரும் ஆனார்.

பிறகு மேத்தா நிலத்தடி வானொலி நிலையத்தை நடத்தும் யோசனையைக் கூறினார்.நாடு முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகள் இதில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது.1942இல் நவம்பர் 12 முதல் தினமும் காலையிலும் மாலையிலும் உஷாவின் குரல் அனைவருக்கும் கேட்கிறது

.கைது செய்வதில் இருந்து தப்பித்து தலைமறைவாகி விட்ட தலைவர்கள்,மக்களைத் தொடர்புகொள்வதற்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவதற்கும் வசதியான மற்றும் சரியான வழியை கண்டறிந்தார்‌.மேலும் மேத்தா அவரது சகாக்களால் இயக்கப்படும் வானொலி நிலையம் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக தணிக்கை செய்யப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட செய்திகளை ஒளிபரப்பினார்.

அதன் பின்னர் மேத்தா அவர்கள் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்டார்.சிறைச்சாலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இதன் பின் மேத்தா அரசியலில் இருந்து விலகி கல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். 'மகாத்மா காந்தியின் அரசியல் மற்றும் சமூக சிந்தனை' என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையில் பணியாற்றினார்.கல்வி மற்றும் சமுகத்தில் பெண்களின் நிலை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

மும்பையில் பவன் கலாச்சார மையத்தை நிறுவினார்.இது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.இந்த மையம் வளர்ந்து இப்போது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை கொண்டுள்ளது.மேத்தா அவர்கள் தனது வாழ்க்கையின் கடைசி 20 ஆண்டுகளை மணிபவன் காந்தி சங்க்ரஹாலாயாவிற்கு அர்பணித்தார்.

பிறகு 2000இல் புனித மைதானத்தில் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்திவிட்டு,கடும் காய்ச்சலால் களைத்துப் போய் வீடு திரும்பினார்.48மணி நேரத்தில் மேத்தா அவர்களின் உயிர் பிரிந்தது .

இன்று, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் உண்மையான சிங்கப்பெண்ணாக மேத்தா நினைவுகூரப்படுகிறார்.அவரது வாழ்க்கை வரலாறு,கதை துன்பம்,பட்ட வலிகள்,வேதனை ,போராட்டம், அர்ப்பணிப்பு இவை அனைத்தும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகம்.

உஷா மேத்தா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏ வதன் மேரே வதன்என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

More News

ஒட்டுமொத்த குடும்பமே சேப்பாக்கம் மைதானத்தில்.. தல மட்டும் மிஸ்ஸிங்.. ஷாலினி பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்..!

ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது என்பதும் இதில் சென்னை அபார

பேசி பேசி சம்பாதித்த வீடு இது.. விஜய் டிவி பிரபலத்தின் கனவு இல்லம் புகைப்படங்கள்..!

விஜய் டிவி பிரபலம் சென்னையில் புதிய வீடு வாங்கியுள்ள நிலையில் பேசிப்பேசி வாங்கிய வீடு இது என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததோடு வீட்டின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த

கேரளாவில் இன்று முதல் தளபதி விஜய்யின் செல்பி கிடையாது.. காரணம் இதுதான்..!

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களுடன் செல்பி

'தக்லைஃப்' படத்தில் இருந்து விலகல்: அடுத்த சில நிமிடங்களில் பிரபல நடிகரின் முக்கிய அறிவிப்பு..!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்திலிருந்து ஜெயம் ரவி விலக இருப்பதாக செய்தி வெளியான சில நிமிடங்களில் ஜெயம் ரவி நடிக்கும்

துல்கர் சல்மானை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்திலிருந்து சமீபத்தில் துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரும்