14 வருடங்களுக்கு பின் கேரளா செல்லும் விஜய்.. அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா?

  • IndiaGlitz, [Thursday,March 14 2024]

தளபதி விஜய் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவுக்கு படப்பிடிப்புக்காக செல்ல இருப்பதை அடுத்து அங்கும் ரசிகர்கள் முன்னிலையில் வேன் மேல் ஏறி செல்பி புகைப்படம் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கோட்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் உட்பட படக்குழுவினர் இன்னும் சில நாட்களில் கேரளா செல்ல உள்ளதாக தெரிகிறது.

14 ஆண்டுகளுக்கு முன்பு ’காவலன்’ என்ற படத்தில் நடிக்கும் போது விஜய் கேரளா சென்றதையடுத்து, அதன் பின்னர் தற்போது தான் அவர் கேரளா செல்ல உள்ளார். விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரது படப்பிடிப்பை பார்க்க ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது அவர் நெய்வேலி, புதுவை ஆகிய பகுதிகளில் ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்தது போல் கேரளாவிலும் செல்பி எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

More News

இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் முடக்கம்.. தமிழ் ஓடிடி தளம் உண்டா? முழு பட்டியல்..!

ஆபாச காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல்

லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு எண்ட்-கார்டு? திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி கடந்த சில மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் அளித்த பேட்டியில் தங்களது திருமண தேதியை

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சூப்பர் ஹிட் 'லவ்வர்' திரைப்படம்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது

அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? செம்ம ஹிட்டாக வாய்ப்பு..!

அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம்.. பிறந்தநாள் வாழ்த்தில் ட்விஸ்ட்..!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் 'எங்கள் இயக்குனர்'