close
Choose your channels

'அஜித் 61' படத்தில் 22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் மீண்டும் இணையும் நடிகை!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

‘அஜித் 61’ என்று தற்போது அழைக்கப்படும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் எச்.வினோத் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் 22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2000ம் ஆண்டு வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற படத்தில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை தபு என்பதும் அதன் பின்னர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது ’அஜித் 61’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.