22 வருடங்களுக்கு பின் மீண்டும் அதே சூப்பர்ஹிட் பாடல்: குஷ்பு வெளியிட்ட வீடியோ!

22 வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் பாடல் மீண்டும் தனது படத்தில் இடம்பெற்றுள்ளதாக நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாசன், குஷ்பு நடித்த திரைப்படம் ’மைக்கேல் மதன காமராஜன்’. இந்த படத்தில் கமல் ,குஷ்பூ நடனமாடிய ’ரம் பம் பம்’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது இன்றும் அந்த பாடல் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவான ’காபி வித் காதல்’ என்ற படத்தில் அதே ’ரம் பம் பம்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது என அறிவித்துள்ள குஷ்பு, இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த பாடல் இன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளார்

சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலம் டிடி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

More News

'சூப்பர் சிங்கர்' முத்துச்சிப்பிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்: இன்று பாடல் ரிலீஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முத்துச்சிப்பிக்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாட வாய்ப்பு கொடுத்து உள்ளதாகவும்

20 வருஷத்துல நீங்க தான் பெஸ்ட்: சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகர் மாதவனுடன் சிம்ரன் நடித்த 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் மாதவனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியான

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி: ஹாட்ரிக் வெற்றி உறுதியா?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதியும்,  சிம்பு நடித்த இன்னொரு திரைப்படமான 'மஹா' திரைப்படம் ஜூலை 22ம் தேதியும் ரிலீஸ்

சந்தானம் அடுத்த படத்தின் செம அப்டேட்: வைரல் புகைப்படங்கள்!

சந்தானம் நடித்து வரும் முக்கிய திரைப்படத்தின் செம அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

லைகாவின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்: ரிலீஸ் எப்போது?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த அடுத்த திரைப்படத்திற்கு சென்சாரில் சான்றிதழ் 'யூ' கிடைத்துள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி