பாண்டியராஜனின் 'ஆண்பாவம்' டைட்டில் உருவாகும் படத்தில் இளம் நடிகர்.. வைரல் போஸ்டர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் பாண்டியராஜன் "ஆண்பாவம்" என்ற திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமான நிலையில், அதே டைட்டில் தற்போது இளம் நடிகர் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது குறித்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கே பாக்யராஜிடம் சில படங்களில் உதவியாளராக இருந்த பாண்டியராஜன், "கன்னி ராசி" என்ற படத்தின் மூலம் இயக்குநராக ஆனாலும், "ஆண்பாவம்" என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். இந்த படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சரியாக 40 ஆண்டுகள் கழித்து இதே டைட்டிலில் உருவாகும் படத்தில், தமிழ் திரையுலகின் இளம் நடிகர் ரியோ நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இது பற்றிய போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கலையரசன் தங்கவேல் இயக்கும் இந்த படத்திற்கு "ஆண்பாவம் பொல்லாதது" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ரியோவின் ஜோடியாக மாளவிகா மனோஜ் நடிக்கிறார். மேலும், சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ரொமான்ஸ் படமாக உருவாக்கி வரும் இந்த படம், இன்றைய கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்றும், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, 2023 ஆம் ஆண்டு ரியோ நடித்த "ஜோ" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதேபோல் இந்த படமும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Delighted to unveil the First Look of #AanpaavamPollathathu 🤗🤗
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 16, 2025
My hearty congratulations to @rio_raj bro, @imalavikamanoj, @kalaiyinkural and the entire cast and crew of #APP ❤️❤️@DrumsticksProd @blacksheepoffl @RjVigneshkanth @Music_Siddhu @ertviji @sheelaActress… pic.twitter.com/jQ05JJvc78
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com