அதுக்குள்ள 'அஜித் 63' அப்டேட்டா? சமூக வலைத்தளங்களில் தீயாய் கிளம்பும் வதந்தி!

  • IndiaGlitz, [Thursday,March 17 2022]

அஜித் படத்தின் அப்டேட்டிற்காக வருடக்கணக்கில் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து அஜித் படத்தின் அப்டேட் வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அப்டேட் என்ற பெயரில் வதந்திகளும் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

அஜித் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கான பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்ட செய்தி வெளியானது.

இந்த நிலையில் திடீரென ’அஜித் 62’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்றும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டுகளால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு அஜித் 63 பட அப்டேட்டும் சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய நடிக்க இருக்கிறார் என ஒரு செய்தி பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தியாக இருந்தாலும், இந்த வதந்தி உண்மையானால் எங்களுக்கு மகிழ்ச்சியே என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More News

துபாயில் ஆர்யா-சாயிஷா: வைரலாகும் செம ரொமான்ஸ் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா - சாயிஷா தற்போது துபாயில் இருக்கும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.

தனது பெயரை பச்சை குத்திய ரசிகரிடம் சன்னிலியோன் என்ன சொன்னார் தெரியுமா? வைரல் வீடியோ

 தனது பெயரை பச்சை குத்திய ரசிகரிடம் சன்னி லியோன் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு போக மாட்டேன்: அஸ்வின் பட நாயகி!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்தால் போக மாட்டேன்

தமிழ் இசையமைப்பாளரிடம் கைகோர்க்கும் தெலுங்கு முன்னணி நடிகர்கள்!

தெலுங்கு திரையுலகில் எம்எம் கீரவாணி, தேவிஸ்ரீபிரசாத், தமன் உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்கள் இருக்கும் நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலர் தமிழ் இசை அமைப்பாளருடன் கைகோர்க்க

என்கவுண்டரால் கொல்லப்பட்ட ரவுடிக்கு 50க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் தொடர்பா?

சமீபத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ரவுடி சென்னையில் 50 க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .