விஜய், அஜித்தை அடுத்து இன்னொரு மாஸ் நடிகருடன் இணையும் த்ரிஷா.. விரைவில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,June 04 2023]

நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் உட்பட தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் அவருடன் நடிக்க வந்த நடிகைகள் தற்போது அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதும், பலர் திரை உலகை விட்டு சென்றுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் த்ரிஷா இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் அவர், அடுத்ததாக அஜித்தின் ’விடாமுயற்’சி படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ’கமல்ஹாசன் 234’ படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 50 வது படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படம் த்ரிஷாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் உடன் த்ரிஷா ’கொடி’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணையவுள்ளார்.

மேலும் அஜித்தின் 50 வது படமான ’மங்காத்தா’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது தனுஷின் 50 வது படத்திலும் த்ரிஷா தான் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ் என மாஸ் நடிகர்களுடன் அடுத்தடுத்து த்ரிஷா நடிக்க இருப்பதால் அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ் திரையுலகில் பிசியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கேன்சரா? அவரே அளித்த விளக்கம்..!

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சர் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். 

அவன் அந்த கோட்டை தாண்டிட்டான்: எஸ்ஜே சூர்யாவின் 'பொம்மை' டிரைலர்..!

எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த 'பொம்மை' என்ற திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'குக் வித் கோமாளி' புகழ்.. என்ன காரணம்?

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் புகழ், தளபதி விஜய் ரசிகர்களிடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிஎஸ்கே வீரரின் திருமண புகைப்படங்கள் வைரல்.. மணமகளும் கிரிக்கெட் வீராங்கனை தான்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு நேற்று திருமணம் நடந்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டென்மார்க் தீவில் ஜோதிகாவுடன் சூர்யா.. வைரல் புகைப்படம்..!

டென்மார்க் நாட்டில் உள்ள தீவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.