close
Choose your channels

'அண்ணாத்த' படத்தை அடுத்து 2 இளம் இயக்குனர்களின் படத்தில் ரஜினி?

Saturday, March 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வந்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ரஜினியின் உடல்நலன் ஆகியவை காரணமாக தாமதம் ஆனாலும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிவரை ரஜினி இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு இரண்டு இளம் இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த், இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ திறப்புவிழா மற்றும் தனுஷின் புதுவீட்டு பூஜை ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos