close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து 'விக்ரம் 58' படத்தில் இணைந்த பிரபலம்

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விக்ரமின் அடுத்த படத்தை 'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளார் என்பதையும் இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்று வெளியான செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே 'இறுதிச்சுற்று', 'இறைவி' மற்றும் சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'என்.ஜி.கே' உள்பட பல திரைப்படங்களில் திறமையாக ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.