close
Choose your channels

எலிமினேஷனுக்கு பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ருதி-மதுமிதா: வைரல் புகைப்படங்கள்!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் ஆறு போட்டியாளர்கள் இதுவரை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும், இதனையடுத்து அமீர் என்ற வைல்ட்கார்டு போட்டியாளர் உள்ளே வந்துள்ளார் என்பதும், அதேபோல் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் இணைந்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 35வது நாளில் வெளியேற்றப்பட்ட ஸ்ருதி மற்றும் 42வது நாளில் வெளியேற்றப்பட்ட மதுமிதா ஆகிய இருவரும் எலிமினேஷனுக்கு பின்னர் தற்போது நட்புடன் பழகி வருவதாக தெரிகிறது.

இருவரும் இணைந்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சீசனில் கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர் என்பதும் அதே போல் இந்த சீசனிலும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து நட்புடன் இருக்கும் காட்சி ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.