close
Choose your channels

'பிகில்' படத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல ஹீரோ.. 'லியோ' அப்டேட்..!

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'பிகில்’ திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் மீண்டும் விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய்தத் உட்பட பலர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டாலும் இன்னும் காஷ்மீரில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூபர் ஒருவர் சமீபத்தில் காஷ்மீர் நடந்து வரும் ’லியோ’ படப்பிடிப்புக்கு சென்று இருந்தபோது அவரது அவர் எடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் அந்த வீடியோவில் நடிகர் கதிர் இருப்பதையும் பார்க்கும்போது அவரும் ’லியோ’ படத்தில் இணைந்து உள்ளார் என தெரிகிறது.

ஏற்கனவே விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளின் பயிற்சியாளராக நடித்த கதிர் தற்போது ’லியோ’ படத்தில் என்ன கேரக்டரில் நடித்திருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் அந்த வீடியோவில் நடிகை பிரியா ஆனந்த் படப்பிடிப்பில் இருந்த காட்சிகளும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.