'D50' படத்தை அடுத்து மீண்டும் ஒரு படம் இயக்கும் தனுஷ்? ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,November 05 2023]

தனுஷ் நடித்து இயக்கி வரும் ’D50’ என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து அவர் ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தில் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குவதோடு தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் ஏற்கனவே ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாக இருக்கும் தமிழ் தெலுங்கு படத்திலும் அதன் பிறகு பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஏதோ, என்னால முடிஞ்சது.. பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்பின் முதல் பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்தவுடன் பதிவு செய்த முதல் ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பிரதீப் இல்லாத முதல் நாள்.. யாரையும் சேவ் செய்யாத கமல்ஹாசன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி 34 நாள் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று 35 வது நாள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றம்.. நண்பன் கவின் 'நச்' பதிவு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனி நேற்று எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டார். அவர் சக போட்டியாளர்களிடம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்  ஃபைனல் போட்டியாளர்களாக வரும் தகுதி உடையவர் என்று பிரதீப் ஆண்டனி கருதப்பட்டார்.

காலையில் கைதான ரஞ்சனா நாச்சியாருக்கு கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு..!

நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்து படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பதும் இதையடுத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.