close
Choose your channels

தனுஷை அடுத்து ஹாலிவுட் செல்லும் பிரபல தமிழ் நடிகர்!

Monday, October 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் நடிகர்களில் ஒருவரான தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நிலையில் இன்னொரு பிரபல நடிகரும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கே பாலச்சந்தர் இயக்கிய ’டூயட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பிரகாஷ்ராஜ், அதன் பின்னர் பல திரைப் படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும், ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது இந்திய அளவில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் பிரகாஷ்ராஜ் ஒருவர் என்பதும் தமிழில் அண்ணாத்த, எனிமி போன்ற படங்களிலும் கன்னடத்தில் ’கேஜிஎப் 2’ படத்திலும், தெலுங்கில் மேஜர், புஷ்பா, சர்காரி வாரி படா ஆகிய படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கார்த்தி நடித்து வரும் ’விருமன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய அளவில் பிஸியாக இருக்கும் பிரகாஷ்ராஜ் விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனவே தனுஷை அடுத்து பிரகாஷ்ராஜ் ஹாலிவுட் செல்ல உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.