தனுஷை அடுத்து இன்னொரு நடிகருக்கும் ஏற்பட்ட விபத்து

  • IndiaGlitz, [Sunday,June 24 2018]

'மாரி 2' படத்தின் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின்போது தனுஷுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் தனுஷை அடுத்து கோலிவுட்டின் இன்னொரு நடிகரான விஜய்வசந்த்துக்கும் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

விஜய் வசந்த் நடிப்பில் ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “ மை டியர் லிசா. திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டைக்காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் முறிந்தது

உடனடியாக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜய் வசந்த் காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து 3 வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுகிறாரா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா? செண்ட்ராயனை கலாய்த்த கமல்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் போட்டியாளர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் பேசி வருகின்றனர்.

ஸ்டுடியோக்ரீன் - ராஜூமுருகன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

சூர்யா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' என்ற படத்தில் தொடங்கி 'பருத்திவீரன், 'சிங்கம்', 'சிறுத்தை', முதல் 'தானா சேர்ந்த கூட்டம்' வரை பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் ஸ்டுடியோக்ரீன்.

பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு இன்று திருப்புமுனை நாள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தவராக ஓவியாவை கூறினால், இருந்த புகழையும் இழந்தவர் என்று ஜூலியை கூறலாம்.

அஜித் பட காட்சியை ஸ்டாலினுடன் ஒப்பிட்ட ராம்தாஸ்

ஒருகாலத்தில் திமுகவும், பாமகவும்  கூட்டணி கட்சியாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக இரு கட்சியினர்களும் எதிரும் புதிருமாக உள்ளனர்.