close
Choose your channels

4 வாரம் பெட்-ரெஸ்ட்டுக்கு பின் மணிமேகலையின் சாலையோர டான்ஸ்: வீடியோ வைரல்

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி வேற லெவல் பிரபலமாகி விட்டது என்பதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கோமாளிகள் அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கோமாளிகளில் ஒருவரான மணிமேகலை நடுவர்கள் என்று கூட என்று பார்க்காமல் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர்களையும் கூட கலாய்த்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் காலில் சுடு தண்ணி ஊத்திக் கொண்டதால் ஏற்பட்ட சிறு விபத்தில் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் இன்று ஒளிபரப்பாகியுள்ள செலிபிரிட்டி நிகழ்ச்சியிலும் மணிமேகலை இல்லை என்பதால், இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மணிமேகலையும் அவருடைய கணவரும் காரில் வெளியில் சென்று சாலையோரத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுகிறார்கள். மணிமேகலையை ஆடும்படி அவருடைய கணவர் ஹூசேன் உற்சாகப்படுத்தும் காட்சிகளும் அதில் உள்ளன. காலில் சுடுதண்ணி ஊத்தி கொண்டதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக 4 வாரம் பெட்ரெஸ்ட் எடுத்தேன் என்றும், நான்கு வாரத்துக்கு பிறகு தற்போது என்னை வெளியில் அழைத்து சென்று ஆட வைக்க எனது கணவர் முயற்சி செய்தார் என்றும், நானும் முடிந்த அளவு ஆடினேன் என்றும் மணிமேகலை கூறியுள்ளார். மணிமேகலையின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.