'கில்லி'யை அடுத்து நயனுடன் விஜய் நடித்த படம் ரீரிலீஸ்.. தளபதி பிறந்தநாளில் வெளியிட திட்டம்..!

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

தளபதி விஜய் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் புதிய படங்களுக்கு இணையாக மூன்று வாரங்கள் திரையரங்குகளில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்து குவித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி நயன்தாராவுடன் விஜய் நடித்த ’வில்லு’ திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய், நயன்தாரா, ரஞ்சிதா, பிரகாஷ் ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த படம் மீண்டும் ரிலீசானால் ’கில்லி’ போடவே சூப்பர் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

’கில்லி’ படத்திற்கு பிறகு அஜித்தின் 'தீனா’ படமும் ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்த ’மங்காத்தா’ உள்பட சில படங்களை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்ததாக சில விஜய்யின் படங்களும் அடுத்தடுத்து வரிசையாக ரீரிலீஸ் ஆக இருப்பது அஜித் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்கள் அடுத்தடுத்து வசூலை குவித்து வருவதால் இன்னும் பல படங்கள் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு ரீரிலீசுக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

டூ பீஸ் பிகினி உடையில் சூர்யாவின் 'கங்குவா' நாயகி.. கடலோரத்தில் ஒரு கிளாமர் போட்டோஷூட்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' படத்தில் நாயகியாக நடித்து வரும் திஷா பதானி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூபிஸ் நீச்சல் உடையில் கடலோரத்தில் எடுத்த ஜாலியான

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்.. இனிமேல் அவ்வளவுதான்.. கோமாளி அறிவிப்பு..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அடுத்தடுத்த எபிசோடு வெளியானது என்பதும் இரண்டு வாரங்களுமே பார்வையாளர்களை கவரும்

சொன்ன சொல்லை காப்பாற்றாத அர்ச்சனா கல்பாத்தி.. என்ன ஆச்சு?

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  தனது அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 12 மணிக்கு மேல் ஆகிவிட்ட

இந்த படத்தை 50 முறை பார்த்தேன்.. ரீமேக் செய்யப்பட்ட ரஜினி படம் குறித்து செல்வராகவன்..!

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தை சுமார் 50 முறை பார்த்து உள்ளேன் என்று இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

மகன் துருவ் நடிக்கும் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட விக்ரம்.. நாளை ஒரு விருந்து இருக்குது..!

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட்டை விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.