3 வார இடைவெளியில் மற்றொரு காஜல் அகர்வால் படம் ரிலீஸ்: தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,March 26 2023]

காஜல் அகர்வால் நடித்த ’கோஸ்டி’ என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் த்ரில் மற்றும் நகைச்சுவை திரைக்கதை அம்சம் கொண்டது என்பதால் பல ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் நடித்த ’கோஸ்டி’ திரைப்படம் வெளியான மூன்றே வாரத்தில் அவர் நடித்த மற்றொரு திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் ’கருங்காப்பியம்’. அவருடன் ரெஜினா, ஜனனி ஐயர், ரெய்சா விலசன் ஆகிய மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கலையரசன், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’கருங்காப்பியம்’ என்ற புத்தகத்தில் அடுத்து வரும் 100 வருடத்தை கணித்து எழுதி உள்ள நிலையில் அதில் குறிப்பிட்டபடி நடக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாத் இசையில், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே காஜல் அகர்வால் நடித்து முடித்து நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ’பாரிஸ் பாரிஸ்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் பாலகிருஷ்ணன் நடிக்கும் தெலுங்கு படம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'லவ்டுடே' ஹிந்தி ரீமேக்.. இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கின்றார்களா?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் மிகப்பெரிய

'குக் வித் கோமாளி சீசன் 4': இந்த வார எலிமினேஷன் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி என்பதும், இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று

விஜய் இதை சொன்னதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்: 'லியோ' படப்பிடிப்பில் நடந்ததை கூறிய பாபு ஆண்டனி..!

 தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் நீண்ட படப்பிடிப்பு காஷ்மீரில் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, கௌதம்

தந்தை இறுதிச்சடங்கிற்கு முன் காலில் விழுந்து நன்றி தெரிவித்த அஜித்.. யார் தெரியுமா?

 அஜித்தின் தந்தை நேற்று காலமான நிலையில் அவர் ஒரு முக்கிய நபரின் காலில் விழுந்த பின்னரே இறுதிச் சடங்கை செய்தார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. 

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான கிளாமர்.. சாயிஷாவின் 'பத்து தல'  பாடல் வீடியோ..!

 அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலில் உச்சகட்ட கிளாமர் காஸ்ட்யூம் உடன் சமந்தா நடனம் ஆடி இருப்பார்