'குட் பேட் அக்லி' மட்டுமல்ல.. ஓடிடியில் விருந்து வைக்க காத்திருக்கும் 3 தமிழ் படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித்தின்’குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள நிலையில் இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றன
முதல் கட்டமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பெருசு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் நடித்த இந்த படம் ஒரு அடல்ட் காமெடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ நடித்த ’ஸ்வீட் ஹார்ட்’ என்ற படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. மேலும் ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் வெளியான ’கிங்ஸ்டன்’ திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் ஜி5 ஓடிடியில் ஏப்ரல் 13 முதல் வழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று முக்கிய தமிழ் படங்கள் போல மேலும் சில பிற மொழி படங்களும் வெளியாகின்றன. குறிப்பாக ஜீ5 ஓடிடியில் ‘டேவிட்’ என்ற மலையாள படம் வெளியாகிறது. அதேபோல் சோனி லைவ் ஓடிடியில் ‘பிரவின்கூடு ஷாப்பு’ என்ற மலையாள படமும் அமேசான் ப்ரைமில் ’நீளமுடி’ என்ற படமும் வெளியாகிறது.
மேலும் அமேசான் ப்ரைமில் ‘கோபிலோலா’ என்ற கன்னட படம் வெளியாகவுள்ளது என்பதும், அதேபோல் நானி நடிப்பில் உருவான ‘கோர்ட்’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ஜெகபதி பாபு நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படம் ‘ராக்ஷசா’ சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com