உதயநிதி படத்தை இயக்கும் விஷால் இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'இப்படை வெல்லும்', 'சரவணன் இருக்க பயமேன்', 'பொதுவாக என் மனசு தங்கம்' என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் 'இரும்புத்திரை' என்ற படத்தை இயக்கி வரும் பி.எஸ்.மித்ரன், இந்த படத்தை முடித்தவுடன் அடுத்ததாக உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் உதயநிதியை சந்தித்து மித்ரன் ஒன்லைன் கதை ஒன்றை கூறியதாகவும், இந்த கதை உதயநிதிக்கு பிடித்துவிட்டதால் இந்த படத்தை உதயநிதியே தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உதயநிதி-மித்ரன் இணையும் படம் குறித்த அறிவிப்பு 'இரும்புத்திரை' படத்தின் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

More News

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மானின் 'காற்று வெளியிடை' டிராக்லிஸ்ட்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர்.

பிரபுதேவாவுடன் மீண்டும் இணைகிறாரா நயன்தாரா?

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கொலையுதிர்க்காலம்'. அஜித்தின் 'பில்லா 2' மற்றும் கமல்ஹாசனின் 'உன்னை போல் ஒருவன்' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வரும் இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார் இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகவிருப்பதாகவும், தமĬ

சசிகுமார்-ஹன்சிகா படத்தில் இன்னொரு பிரபல நாயகி

பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் 'கொடிவீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக முதல்முறையாக ஹன்சிகா நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ் புகார்

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒரு திரை நட்சத்திரமாக மட்டுமின்றி அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்து வருகிறார்

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிப்பது உண்மையா? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும்