close
Choose your channels

'ஜெயிலருக்கு அடுத்த படம்.. ரஜினியின் கேரக்டர் இதுவா? ரசிகர்கள் ஆச்சரியம்!

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த், ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கஇருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஞானவேலு இயக்கத்தில் உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் முஸ்லிம் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையை கொண்ட கதை என்றும் ’ஜெய்பீம்’ படம் போலவே ஒரு அழுத்தமான சமூக பிரச்சனையை அலசும் படம் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் கடைசியாக ’தர்பார்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நிலையில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.