மாலத்தீவுக்கு நீங்களும் போயிட்டீங்களா? சமந்தாவின் அசத்தல் புகைப்படங்கள் 

  • IndiaGlitz, [Monday,November 23 2020]

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏற்கனவே தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

மாலத்தீவுக்கு சென்றுள்ள நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களும் மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும் அழகையும் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நாமே மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் ஏற்படுகிறது.

மேலும் மாலத்தீவு சுற்றுலா துறையினர் தான் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்களது அழைப்பின் பெயரில் தான் ஒரு சில நடிகைகள் அங்கு சென்றுள்ளதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாலத்தீவு செல்லும் நடிகைகளின் பட்டியலில் சமந்தாவும் இணைந்துள்ளார். இன்று பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் கடலின் அழகை நின்று ரசிப்பது போல ஒரு புகைப்படமும், ஸ்கூபா டைவிங்கிற்கு தயாராகும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ரசிகர்களின் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லம்பாடி இனத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர்… குவியும் பாராட்டு!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மருத்துவப் படிப்பு மிகவும் போற்றத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.

தகாத உறவை மறைக்க ரூ.12 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்… இளவரசியின் குட்டு அம்பலம்!!!

துபாய் இளவரசியான ஹயா தனது மெய்க்காப்பாளர்களுள் ஒருவரான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்பவருக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள கடிகாரம் மட்டுமல்லாது பல விலையுயர்ந்த பொருட்களை பரிசாகக் கொடுத்துள்ளார்

போதை பொருள் விவகாரத்தால் நின்றுபோன பிரபல நடிகரின் திருமணத்தில் திடீர் திருப்பம்!

கடந்த சில மாதங்களாக திரையுலகினர் இடையே போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி

குஷ்புவை அடுத்த பாஜகவில் இணைகிறாரா கமல்-ரஜினி பட நாயகி?

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

போதை பத்தல... சானிடைசர் குடித்த 7 பேர் பலி... பரபரப்பு சம்பவம்!!!

இந்தியாவில் ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது சிலர் போதைக்காக சானிடைசரை அருந்தி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.