பாலிவுட் பிரபலத்திற்கு ஜோடியாகும் த்ரிஷா.. அஜித் பட இயக்குனரின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Saturday,February 03 2024]

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்த த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். விஜய்யுடன் ’லியோ’ திரைப்படத்தில் நடித்த த்ரிஷா தற்போது அஜித் உடன் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தில் நடித்து வரும் த்ரிஷா, மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நிவின்பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ என்ற படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த ’பில்லா’ ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.

 

More News

'கோட்' படத்தின் டெக்னாலஜியை பயன்படுத்தும் லோகேஷ்.. வேற லெவலில் 'தலைவர் 171'

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'பிகில்' பாண்டியம்மாளின் திருமண நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படங்கள், வீடியோ..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படத்தின் இசை வெளியீடு..!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'லவ்வர்'. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. சாகவில்லை.. வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே

நடிகை பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்த நிலையில் இன்று அவர் திடீரென தான் உயிரோடு இருக்கிறேன்

புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் 'ஒரு நொடி' திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்..!

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார்.