கமல், விஜய்யை அடுத்து அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு பெரிய தொகையை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் நாசர் தலைமையில் நடிகர் சங்கம் பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்கத்திற்காக ஒரு மிகப்பெரிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அந்த கட்டிடத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பிரபல நடிகர்களிடம் தலா ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி, அந்த பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு, அதன் பின்னர் அந்த கட்டிடத்தில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து வாங்கிய கடனை திருப்பி கொடுத்து விடலாம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டனர். இந்நிலையில் முதல் நபராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கினர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகளுக்காக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என்று விஷால் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராமர் மட்டுமல்ல.. இன்னும் சில புது கோமாளிகள்.. களை கட்ட போகும் 'குக் வித் கோமாளி 5'

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சாதகமாக வந்த நீதிமன்ற தீர்ப்பு.. ராமராஜன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் படம் ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தந்தை படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்.. மீண்டும் ரூ.1000 கோடி வசூல் கிடைக்குமா?

பிரபல நடிகரின் திரைப்படம் கடந்த ஆண்டு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆன நிலையில் அவருடைய அடுத்த படத்தில் மகள் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும்

'கூலி' ரூ.1000 கோடி வசூல் செய்யும்.. ரஜினியை விமர்சனம் செய்தவரின் பதிவால் பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் வீடியோ நேற்று வெளியான நிலையில் இந்த படத்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினியை விமர்சனம் செய்த

டைட்டானிக், அவதார் ரீரிலீஸ் வசூலை தொடும் 'கில்லி'.. உடைக்கப்படும் சாதனைகள்..!

உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன 'டைட்டானிக்' 'அவதார்' போன்ற திரைப்படங்கள் வசூல் செய்த தொகையை சமீபத்தில் வெளியான விஜய்யின் 'கில்லி' படம் நெருங்கி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.