கமல், ரஜினியை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

கோலிவுட் திரையுலகில் இருந்து கமல், ரஜினி, விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோர் அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் கே.பாக்யராஜ் அவர்களும் இணையவுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னர் அரசியல் களத்தில் குதித்த இயக்குனர் கே.பாக்யராஜ் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அணியை ஆதரித்தார். பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார். ஒருசில ஆண்டுகளில் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் பாக்யராஜ் மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ் கூறியதாவது: அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

கிட்டத்தட்ட, நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன்.  யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்

ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவது அவர்களது உரிமை என்று கூறிய கே.பாக்யராஜ், இருவரையும் ஆதரிப்பது மக்களின் கையில் தான் உள்ளது என்று கூறினார்.